ராஜபக்ஷக்களை அரசியலில் இருந்து ஒருபோதும் வீழ்த்த முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ராஜபக்ஷக்கள் கடந்த இரண்டு தேசிய தேர்தல்களிலும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றார்கள் என்பது மட்டுமே உண்மை. ஆனால், அவர்களை அரசியலில் இருந்து ஒருபோதும் வீழ்த்த முடியாது. இதை அநுரவின் கட்சிக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனெனில், அநுரவின் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களில் சிலர் அடிப்படை அரசியல் அறிவு தெரியாமல் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள். அவர்கள் ராஜபக்ஷக்களின் அரசியல் வரலாற்றை ஒரு தடவை மீட்டுப் பார்க்க வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக அவர்கள் கருத்து வெளியிடுவதால் அவர்களின் கட்சிக்கே அவமானம்.” – என்றார்.