• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, July 2, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மன்னார் துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் இன்று குற்ற ஒப்புதல் வாக்குமூலம்.!

Mathavi by Mathavi
January 21, 2025
in இலங்கை செய்திகள்., மன்னார் செய்திகள்
0
மன்னார் துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் இன்று குற்ற ஒப்புதல் வாக்குமூலம்.!
Share on FacebookShare on Twitter

மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இருவரைச் சுட்டுக் கொ லை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மற்றும் அடம்பனில் இருவரைச் சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் என மூன்று சந்தேக நபர்களுக்கு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிவான் முன்னிலையில் வழங்க முன்வந்துள்ளனர்.

அதனால் சந்தேக நபர்கள் மூவரையும் இன்று செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கடந்த 16ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.20 மணியளவில் மன்னார் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாகவுள்ள கோட்டை வீதியில் வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

2022ஆம் ஆண்டு உயிலங்குளம் – நொச்சிக்குளம் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலில் சகோதரர்கள் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். அதே குடும்பத்தை சேர்ந்த இருவர் உட்படப் பலர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தில் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மன்னார் நீதிவான் நீதிமன்ற சுருக்கமுறையற்ற விசாரணைக்கு முன்னிலையாக நீதிமன்றுக்கு வருகை தந்தபோதே அவர்களை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி்ச்சூடு நடத்திவிட்டுத் தப்பித்தனர்.

சம்பவத்தில் நொச்சிக்குளத்தை சேர்ந்த இருவர் உயிரழந்தனர். பெண் உட்பட இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடக்கிவிடப்பட்டன. பேசாலையில் வைத்து இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய நபர் உட்பட இருவர் தென்னிலங்கையில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அடம்பனில் வைத்து இருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர். அந்தக் கொலையும் நீதிமன்றுக்கு முன்பான கொலையும் சகோதரர்களின் கொலைக்குப் பழிதீர்க்கும் சம்பவங்கள் எனக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் மன்னார் நீதிவான் மன்றில் நேற்றுமுன்தினம் மாலை முற்படுத்தப்பட்டனர். பொலிஸ் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர். அதனை ஆராய்ந்த நீதிவான், நேற்று வரை மூவரையும் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து கட்டளை வழங்கினார்.

இந்த நிலையில் மூவரும் நேற்று மாலை மன்னார் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மூவரும் நீதிவான் முன்னிலையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்க மன்றிடம் வேண்டுதல் வைத்தனர்.

அதனால் பொலிஸ் தடுப்புக் கட்டளையை நீடிக்காது சந்தேகநபர்கள் மூவரையும் இன்று வரை விளக்கமறியலில் முன்வைக்க உத்தரவிட்ட நீதிவான், இன்று குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவதற்கு அனுமதியளித்தார்.

Related Posts

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்தமைக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டனம்!

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்தமைக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டனம்!

by selvan
July 2, 2026
0

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்தமைக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் ஜனநாயகத்தினை கேள்விக்குள்ளாக்கும் இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கமுடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு...

ஓசன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை!

ஓசன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை!

by selvan
July 2, 2026
0

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கிவரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 3 நாள் வதிவிடப் பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது. நடைபெற்றது. மட்டக்களப்பு சர்வோதயம் பயிற்சி நிலையத்தில் ஓசன் ஸ்டார் லங்கா...

மன்னாரில் தொழிலதிபர் முஹமட் பாஹிம் மீது தாக்குதல்-பழக்கடை உரிமையாளர் கைது.

மன்னாரில் தொழிலதிபர் முஹமட் பாஹிம் மீது தாக்குதல்-பழக்கடை உரிமையாளர் கைது.

by selvan
July 2, 2026
0

மன்னார் நகர பேருந்து நிலைய பகுதியில் அமைந்துள்ள உணவகத்துடன் கூடிய பழ விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான முஹமட் பாஹீம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த தாக்குதல் சம்பவம்...

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்

by selvan
July 2, 2026
0

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி மஹா விகாரை பிரிவின் அனுகாநாயக்க, சாஸ்திரபதி அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர்...

இளம் வயதினரிடையே பாலியல் நோய்கள் அதிகரிப்பு!

இளம் வயதினரிடையே பாலியல் நோய்கள் அதிகரிப்பு!

by selvan
July 2, 2026
0

இளம் வயதினரிடையே பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பாடசாலை மாணவர்கள் மற்றும்...

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசிய திட்டமாக செயற்படுத்தப்பட வேண்டும்!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசிய திட்டமாக செயற்படுத்தப்பட வேண்டும்!

by selvan
July 2, 2026
0

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். போதைப்பொருள்...

அர்ச்சுனாவின் எம்.பி. பதவி பறிபோகுமா? – ஆகஸ்ட் 31 ஆம் திகதி விசாரணை!

அர்ச்சுனாவின் எம்.பி. பதவி பறிபோகுமா? – ஆகஸ்ட் 31 ஆம் திகதி விசாரணை!

by selvan
July 2, 2026
0

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பதவியிலிருப்பதற்கான தகைமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான வாதங்களை விசாரணை செய்வதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும்...

கடவுச்சொற்களை வழங்குமாறு சுரேஷ் சலேயை அதிகாரிகள் கட்டாயப்படுத்தக் கூடாது!

கடவுச்சொற்களை வழங்குமாறு சுரேஷ் சலேயை அதிகாரிகள் கட்டாயப்படுத்தக் கூடாது!

by selvan
July 2, 2026
0

கைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை சுரேஷ் சலே, வழங்க வேண்டும் என விசாரணை அதிகாரிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள்...

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார் வருண ஜயசுந்தர!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார் வருண ஜயசுந்தர!

by selvan
July 2, 2026
0

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்ததன் பின்னர், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர அங்கிருந்து புறப்பட்டுச்...

இந்திய உதவி உயர் ஸ்தானிகர் சரண்யா வி.கே.எஸ் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்திய உதவி உயர் ஸ்தானிகர் சரண்யா வி.கே.எஸ் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

by selvan
July 2, 2026
0

இந்திய உதவி உயர் ஸ்தானிகர் அதி மேதகு சரண்யா வி.கே.எஸ் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நேற்று மாலை 3.30 மணிக்கு நடத்தினார்.இந்த நிகழ்வு கண்டி இந்திய உதவி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி