தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு விசேட சுற்றிவலைப்பொன்றை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று(12) திருகோணமலையில் மேற்கொண்டிருந்தார்கள்.
திருகோணமலை நகரில் அரிசி விலையை அதிகரித்து விற்பனை செய்த இரு கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு கடையில் சிவப்பு அரிசி 280 ஆகும் இன்னொரு கடையில் வெள்ளை பச்சை அரிசி 270 ஆகும் விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்திய பின்பு இரு கடைகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகக் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த நேரிடலாம் என நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்