இன்றையதினம் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/166 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடு ஒன்றின் மீது வேப்பமரம் முறிந்து விழுந்ததால் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
மழையுடன் வீசிய காற்று காரணமாக குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் உயிர்ச் சேதங்கள் எவையும் குறித்த அனர்த்தத்தால் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.