யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை இன்று இரவு முன்னெடுக்கப்பட்டது.
ADVERTISEMENT
19 வயதான குறித்த சந்தேக நபரிடம் இருந்து 94 போதை மாத்திரைகளும் 465 கிராம் கஞ்சா கலந்த மாவாவும் மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.