வவுனியாவில் 21 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற் செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார்.
பருவகால மழை, கடந்த வருட இறுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் இவ்வருட ஆரம்பத்தில் பெய்த மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் அவற்றின் நீர் கொள்ளளவினை எட்டியுள்ளது.
இதன் காரணமாக கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறு போக அளவினை விட இம்முறை ஐயாயிரம் ஏக்கர் அளவில் மேலதிகமாக சிறுபோகம் நெற் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி 21 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது எனத் தெரிவித்தார்.




