இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் – கோப்பாய் பிரதேச செயலகம் உரும்பிராய் தெற்கு பிரதேசத்தில் உள்ள J/265 கிராம சேவையாளர் பிரிவான யோகபுரம் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 157 குடும்பங்களுக்கு, 785,000 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் யோகபுரம் அண்ணா சனசமூக நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது.
22/12/2024 ந் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் அண்ணா சனசமூக நிலைய தலைவர் திரு.ச.ரவீன்ராஜ் தலைமையில் இடம்பெற்ற இவ் உதவித் திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்ததுடன் மருத்துவர் திரு.செந்தில்குமரன் அவர்களும் கலந்துகொண்டார்.