யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வில் தவத்திரு வே.முருகேசு சுவாமிகளின் 28ஆவது குருபூசை இடம் பெற்றது.
இதில் “குருபூசையின் மகத்துவம் “ என்ற ஆண்மீக பேருரையினை வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி ஆசிரியர் துரை கணேசமூர்த்தி நிகழ்த்தினார்கள்.
அத்துடன் தம்பாளை பொன்னம்பலவாணர் சித்தி விநாயகர் ஆலய கட்டிடப் பணிக்காக ரூபா 50,000 நிதியும் வழங்கிவைக்கப்பட்டது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனையை தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்