யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் பகுதியில் இருந்து கடந்த மாதம் 15ஆம் தேதி மீன்பிடிக்க புறப்பட்டு எஞ்சின் பழுது காரணமாக கடந்த 20ஆம் தேதி காலை தொண்டியிலிருந்து சுமார் ஒரு நாட்டிகள் தூரத்தில் கரை ஒதுங்கிய ஞானராஜ், பூலோகன் ஆகிய இரு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்த மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை அரசால் நல்லிணக்க அடிப்படையல் விடுதலை செய்யப்பட்டதால் புழல் சிறையில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இலங்கை மீனவர்களை இந்திய அரசு நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் விமான மூலம் யாழ்ப்பாணம் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது