யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் 1400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை மாத்திரைகளுடன் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.
ADVERTISEMENT
சந்தேகநபரிடம் இருந்து 1400 போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அதனை தொடர்ந்து அவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.