வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது.
புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கீழ் புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ள நிலையில், அமைச்சர்கள், ஆளுநர்கள் என பலர் தங்களது பதவிகளை இராஜினாமா செய்து வருகின்றனர்.
அதற்கமைய, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.