காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த கைதியொருவரே உயிரிழந்துள்ளார்.
ADVERTISEMENT
இவர் கலவரம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு பலப்பிட்டிய நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவின் கீழ் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.