2024 இதுதான் நடக்கும்-பாபாவங்காவின் அதிர்ச்சி கணிப்பு..!

119

2024 ஆம் ஆண்டு தொடங்கி இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட முழுமையாக முடியாத நிலையில், ஏற்கனவே சில விஷயங்கள் உண்மையாக நடக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் எங்கு அவர் கூறிய மற்ற விஷயங்களும் உண்மையாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

1) ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் கேன்சர் காரணமாக உயிரிழந்து வருகின்றனர். சில குறிப்பிட்ட வகை கேன்சருக்கு சிகிச்சை இருந்தாலும் பல கொடிய வகை கேன்சர் பாதிப்புகளுக்குச் சிகிச்சையோ அல்லது வேக்சினோ இல்லாமலேயே இருந்தது.

இதற்கிடையே கேன்சருக்கான தடுப்பூசியை உருவாக்குவதில் நெருங்கிவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் கூறியிருந்தார். இந்த வேக்சின் மிக விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் மேலும் கூறுகையில்,

“கேன்சருக்கான தடுப்பூசியை நாங்கள் நெருங்கிவிட்டோம். புதிய தலைமுறையினருக்கு இந்த இம்யூனோமோடூலேட்டரி மருந்துகள் கிடைக்கும். கேன்சர் பாதிப்பைத் தடுக்க இந்த மருந்து விரைவில் நமக்குப் பயன்படும் என நம்புகிறேன்” என்று அவர் கூறியிருந்தார். அதேசமயம் , கேன்சரில் பல வகைகள் இருக்கும் நிலையில், அதில் எந்த வகை கேன்சர்களுக்கு எதிராக இது வேலை செய்யும் என்பது குறித்த தகவல்களை அவர் பகிரவில்லை.

அதேவேளை பாபா வாங்கா அல்சைமர், புற்றுநோய் உள்ளிட்ட குணப்படுத்த முடியாத நோய்களுக்கு புதிய தடுப்பூசி அல்லது சிகிச்சை முறை வரும் என்பதை முன்கூட்டியே கணித்திருந்தார். அதேபோல உலகப் பொருளாதாரத்தை மொத்தமாகப் பாதிக்கும் வகையில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அதிகரிக்கும் கடன் உச்சவரம்புகள், புவிசார் அரசியல் காரணமாக இது ஏற்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

2) அவர் கணித்தபடியே ஏற்கனவே, விலைவாசி உயர்வு, பணவீக்கம் காரணமாக பிரிட்டன் தள்ளாடி வருகிறது.

கடந்த இரண்டு காலாண்டுகளில் பிரிட்டன் பொருளாதாரம் சரிந்த நிலையில், அந்நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அங்கே தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரிட்டனுக்கு பெரும் தலைவலி தான்.

அதேபோல ஜப்பான் நாட்டிலும் கடந்த இரண்டு காலாண்டுகள் பொருளாதாரம் சரிந்தது. இதனால் ஜப்பான் நாட்டிலும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச அளவில் மிகப் பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் லிஸ்டிலும் ஜப்பான் 3ஆவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு பெரும் நாடுகளில் இப்போது மந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அது மற்ற நாடுகளுக்கும் பரவும் என்று அஞ்சப்படுகிறது.

பாபா வாங்காவின் இந்த இரு கணிப்புகள் அப்படியே நடந்துள்ள நிலையில், எங்கு அவரது மற்ற கணிப்புகளும் அப்படியே நடந்துவிடுமோ என்ற அச்சம் உலக மக்களிடையே நிலவுகின்றது.

அதோடு ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும் அங்குள்ள ஒரு முக்கிய நாடு பயோ ஆயுதங்களைச் சோதனை செய்யும்.. அல்லது அதை வைத்துத் தாக்குதல் நடத்தும் என்று கணித்துள்ளார்.

இயற்கை பேரழிவுகள் காரணமாக மிக மோசமான வானிலை நிகழ்வுகள் நடக்கும். சைபர் தாக்குதல்கள் உலக நாடுகளுக்கு மிகப் பெரிய தலைவலியைக் கொடுக்கும் என்றும் பாபாவங்கா தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ள நிலையில் தற்போது வரது கணிப்புக்கள் நடந்தேறிவரும் நிலையில், இவை தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.