சாந்தன் அண்ணாவின் இறுதி நிகழ்வில் அரசியல் பேசுவோர் துரத்தபடல் வேண்டும்..!

119

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவில் சிறைவாசம் அனுபவித்து விடுதலை பெற்று நாடு திரும்பும் தருணத்தில் காலனின் சதியால் உயிர் துறந்த சாந்தன் அண்ணாவின் வித்துடல் ஈழத்தை வந்தடைந்து இறுதி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் ,தாயகம் எங்கும் இன்று துக்க தினமாக அனுஸ்ரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

சாந்தன் அண்ணா இறுதி நிகழ்விலோ,அஞ்சலியிலோ,அரசியல் பேசுவோர் அடித்து துரத்த பட வேண்டும் என்று மக்கள் கூட்டாக கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

 

அன்மைக் காலமாக உயிரிழந்தவர்களின் உடலங்களில் அரசியல் பேசி ஒட்டு பிச்சை கேட்கும் துர்ப்பாக்கிய நிலையில் தாயகம் காணப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

அவர்களை போல் ஆக முடியாத கோழைகளின் வயிற்று பிழைப்பே நினைவேந்தல் அஞ்சலிகளில் அரசியல் என மக்கள் கொதிப்படைந்து கருத்து தெரிவிப்பது காணக்கூடியதாக உள்ளது.

 

எவ்வாறாயினும் தாயகம் உன்னத தியாகங்களையும் மகத்தான மகோ உன்னதர்களையும் தாங்கிய தேசம் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

 

ஆகவே இனி வரும் காலங்களில் நினைவேந்தல்,மாவீரர் நாளில் அரசியல் பேசுவோர்,ஊர் ஊராக கட்டி திரிந்து எமது தியாகங்களை அசிங்கபடுத்துவோருக்கு இனி மக்கள் நல்ல தீர்ப்பு வழங்கட்டும்.

 

இளமையை துறந்து தேசிய வேட்கையில் தளராது பயணித்த அந்த ஆன்மா சற்றேனும் தாய் மண்ணில் இளைப்பாறட்டும்.

 

விதை ஒன்று வீழ்கையில் தளிர் ஒன்று உருப்பெறும்.

 

ஆகேவே சாந்தன் அண்ணா ஆழ்ந்த இரங்கலுக்கு இடமில்லை ஏனெனில் நீர் மாவீரன்.

 

Comments are closed.