ஹோட்டல் அறையில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு!

61

பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து, சந்தேக நபரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று பொத்துவில் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகம்பை பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பெண் ஒருவரே நேற்று (12) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் மஹகளுகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண் ஆண் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்க வந்திருந்த நிலையில், அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த முகாமையாளர் அறுகம்பை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்களுடன் அறையின் கதவை உடைத்து திறந்துள்ளனர்.

இதன்போது, குறித்த அறையில் பெண் ஒருவர் இரத்த வௌ்ளத்துடன் சடலமாக காணப்பட்டதாகவும், சந்தேகநபர் அறையை அண்டிய குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

34f34f

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.