ஹெகலியவின் அமைச்சுப் பதவி பறிபோகின்றது!

0 26

கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர் வசமுள்ள சுற்றாடல்துறை அமைச்சைப் பறித்தெடுத்து இன்னொருவருக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த மோசடியில் சிக்கிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் ,தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய, தற்போது கைது செய்யப்பட்டு, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் தொடர்ந்தும் அமைச்சரவையில் நீடித்தால், அது தனது அரசாங்கத்துக்கு பெரும் சிக்கலாகிவிடும் என்பதை உணர்ந்து கொண்ட ஜனாதிபதி ரணில், ஹெகலிய வசமுள்ள அமைச்சுப் பதவியை மீளப்பெறத் தீர்மானித்துள்ளார். ஆனாலும் ரணிலின் இந்த முடிவுக்கு பொதுஜன பெரமுன முட்டுக்கட்டை போடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒருவேளை கெஹலியவின் அமைச்சுப் பதவியை ரணில் பறித்தால், பொதுஜன பெரமுன ரணிலுக்கு வழங்கி வரும் ஆதரவு விலக்கிக் கொள்ளக்கூடும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.