வைத்தியர்களுக்கு முகநூலில் அவதூறு – யாழ் ரகு ராமுக்கு நீதிமன்றின் வினோத தண்டனை..!

110

வைத்தியர்களுக்கு முகநூலில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட யாழ் உரும்பிராயைச் சேர்ந்த ரகுராம் என்பவரை மன்னிப்பு கேட்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் இவ்வாறான செயற்பாடுகளில் இனிமேல் இடம்பெறக்கூடிய   என எச்சரிக்கையும் விடுத்தது.

குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,

யாழ்ப்பாணம் – உரும்பிராயைச் சேர்ந்த சேர்ந்த ரகுராம் என்ற நபர் தன்னை ஒரு வைத்தியராக தெரிவித்து ஏனைய வைத்திய முறைகள் தொடர்பிலும் வைத்தியர்கள் தொடர்பிலும் முகநூலில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் காணொளிகளை பதிவேற்றி வந்தார்.

நிலையில் குறித்த நபருக்கு எதிராக தற்போது நான் வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.  பிரவணன் யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் இன்று  புதன்கிழமை வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறைந்த நபரை எனது தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டு மாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தவுடன் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை செய்து வழக்கிலிருந்து விடுவித்தார்.

குறித்த நபருக்கு எதிராக கோப்பாய் பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் வழக்கு ஒன்று இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.