வீரக்கொடி எம்.பியிடம் மன்னிப்புக் கெட்குமாறு பரிந்துரை.!

பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின் போது, ​​பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியை அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி விகும் லியனகே ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தின் சிறப்புரிமைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 5, 2023 அன்று பாராளுமன்ற உறுப்பினர் வீரக்கொடி பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத் தளபதியும் தம்மை அச்சுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரக்கொடி ஒக்டோபரில் எழுப்பிய சிறப்புரிமை விவகாரம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் சிறப்புரிமைக் குழு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது.

பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தைக் குறைப்பதற்கு இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதை விட உயர்மட்ட இராணுவ அதிகாரிகளின் செலவினங்களைக் குறைப்பதே மேல் என குறிப்பிட்ட குழுக்கூட்டத்தில் தாம் குறிப்பிட்டதாகவும் பாதுகாப்புச் செயலாளர் அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக இவ்வாறான அச்சுறுத்தல் அறிக்கைகளை வெளியிடுவது நிலையியற் கட்டளைகளுக்கு எதிரானது எனவும் அவர்களை சிறப்புரிமைக் குழுவின் முன் அழைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி விகும் லியனகே ஆகியோர் சிறப்புரிமைக் குழுவிற்கு அழைக்கப்பட்டு, சம்பவம் தொடர்பில் அவர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

குழுவின் தலைவர் பாரபட்சமின்றி கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கூட்டங்களின் போது எம்.பி.க்களின் சிறப்புரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழு கூட்டங்களில் கலந்துகொள்ளும் அதிகாரிகள் பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தை அறிந்திருக்க வேண்டும் என்றும் சிறப்புரிமைக் குழு பரிந்துரைத்துள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின் போது ​​பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியை அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி விகும் லியனகே ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தின் சிறப்புரிமைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 5, 2023 அன்று பாராளுமன்ற உறுப்பினர் வீரக்கொடி பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத் தளபதியும் தம்மை அச்சுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரக்கொடி ஒக்டோபரில் எழுப்பிய சிறப்புரிமை விவகாரம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் சிறப்புரிமைக் குழு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது.

பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தைக் குறைப்பதற்கு இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதை விட உயர்மட்ட இராணுவ அதிகாரிகளின் செலவினங்களைக் குறைப்பதே மேல் என குறிப்பிட்ட குழுக் கூட்டத்தில் தாம் குறிப்பிட்டதாகவும் பாதுகாப்புச் செயலாளர் அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக இவ்வாறான அச்சுறுத்தல் அறிக்கைகளை வெளியிடுவது நிலையியற் கட்டளைகளுக்கு எதிரானது எனவும் அவர்களை சிறப்புரிமைக் குழுவின் முன் அழைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி விகும் லியனகே ஆகியோர் சிறப்புரிமைக் குழுவிற்கு அழைக்கப்பட்டு சம்பவம் தொடர்பில் அவர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது

குழுவின் தலைவர் பாரபட்சமின்றி கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கூட்டங்களின் போது எம்.பி.க்களின் சிறப்புரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழு கூட்டங்களில் கலந்துகொள்ளும் அதிகாரிகள் பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தை அறிந்திருக்க வேண்டும் என்றும் சிறப்புரிமைக் குழு பரிந்துரைத்துள்ளது.

Comments are closed.