விரிவுரையாளர்கள் கடன்களைச் செலுத்தவில்லை – நீதி அமைச்சர் தெரிவிப்பு.!

உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அரச வங்கிகள் மூலம் 1300 மில்லியன் ரூபாவை கடனாக பெற்றுக் கொண்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் அதனை மீளச் செலுத்த தவறியுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்இ

மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவை நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டன. குறிப்பாக அந்த வங்கிகள் மூலம் விவசாயத்துறை மற்றும் கைத்தொழில் துறையை முன்னேற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வின் காலத்தில் அனைத்து விவசாய நிறுவனங்களிலும் இலங்கை வங்கி கிளை இயங்கி வந்துள்ளது. அந்தந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக கடன் வழங்கும் நடைமுறையை அந்த வங்கிகள் முன்னெடுத்தன.

அந்த வகையில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன அவ்வாறு வழங்கி யுள்ள மூன்றாம் கட்ட கடனில் 602 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ளவர்களால் மீள செலுத்தப்படாமல் உள்ளது.

அதேபோன்றே உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அரச வங்கிகள் மூலம் 1300 மில்லியன் ரூபாவை கடனாக பெற்றுக் கொண்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் அதனை மீளச் செலுத்த தவறியுள்ளனர்.அந்த விரிவுரையாளர்கள் உயர்கல்வியை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள நிலையில் அவர்கள் மீண்டும் தத்தமது பல்கலைக்கழகங்களுக்கு வருகை தர தவறியுள்ளார்கள் . அதனால் இந்த பணத்தை அறவிடுவதற்கு பல்கலைக்கழக கட்டமைப்போ அல்லது வங்கிகளோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதேவேளை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நியாயமான வட்டியில் கடன் வழங்குவதற்கான வாய்ப்பு இருந்த போதும் அரச வங்கிகள் இரண்டும் பின்பற்றிய கொள்கை காரணமாக 602 பில்லியன் ரூபா நாட்டுக்கு இல்லாமற் போயுள்ளது. அந்த வகையில் நோக்கும் போது அரச வங்கிகளின் நிதி கொள்கைகள் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றார்

Comments are closed.