வடமாராட்சி கிழக்கு மீனவர்களும் போராட்டம்..!{படங்கள்}

43

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வரும் தமிழக மீனவர்களை கண்டித்து இன்று(03.03.2024.)காலை இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் பைபர் படகுகளில் கருப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர்.

 

வடமராட்சி கிழக்கு மீனவர்களும் குறித்த போராட்டத்தில் இணைந்து தங்களது எதிர்ப்பை சர்வதேச கடற்பகுதியில் கறுப்புக் கொடி ஏந்தி வெளிப்படுத்தினர்

 

வெற்றிலைக்கேணி,ஆழியவளை மீனவர்களுடைய இருபது படகுகள் 40மீனவர்களுடன் இணைந்து அழிக்காதே அழிக்காதே எமது கடல்வளத்தை அழிக்காதே,அடிக்காதே அடிக்காதே எமது வயிற்றில் அடிக்காதே,தொப்புள் கொடி உறவே இது நியாயமா? போன்ற கோசங்களை எழுப்பி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

 

தமது வாழ்வாதாரத்தை சுரண்டிச் செல்லும் இந்திய மீனவர்களை இனியாவது இலங்கை அரசாங்கம் கடற்படையின் உதவியுடன் கைது செய்யவேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

IMG 20240303 103242 IMG 20240303 103337 IMG 20240303 104809 IMG 20240303 103915

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.