வடக்கு மாகாண பிரதம செயலாளராக இளங்கோவன் நியமனம்!

40

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக திரு.இளங்கோவன் அவர்கள் இன்றையதினம் நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வினால் இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. அவருக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்றையதினம் கையளித்தார்.

இலங்கை நிர்வாக சேவையின் தலைசிறந்த அதிகாரியான திரு.இளங்கோவன் அவர்கள் கடந்த காலங்களில் வடக்கு மாகாண அமைச்சுக்கள் பலவற்றில் செயலாளர் பதவியை வகித்ததுடன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அவர் இதற்கு முன்னர் வடக்கு மாகாண அபிவிருத்திகள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Screenshot 20240312 224355 Lite

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.