யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி..!{படங்கள்}

76

வடமராட்சி கிழக்கு யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று வெள்ளிக் கிழமை 29.02.2024 பாடசாலை மைதானத்தில் பி.ப 01.45 மணியளவில் ஆரம்பமானது.

இசைவாத்தியங்கள் முழங்க மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு பாடசாலை முதல்வர் கந்தசாமி-சிவனேசன் தலைமையில்  நிகழ்வு ஆரம்பமானது.

இந்த  நிகழ்வில் பிரதம விருந்தினராக கணினிப் பொறியியலாளர்,பிரதம நிறைவேற்று அதிகாரி அரியகுமார்-சிறிகரன்,

சிறப்பு விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் செல்லத்துரை-இராமச்சந்திரன்,

கெளரவ விருந்தினர்களாக,

உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்-கிருஷ்ணபிள்ளை பாக்கியநாதன்,

மு/செம்மலை மகாவித்தியாலய ஆசிரியர் வாரித்தம்பி -பிரபாகரன்,

பருத்தித்துறை பிரதேச செயலகத்தினுடைய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சரவணமுத்து-சிதம்பரநாதன் மற்றும் கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதுடன்,வெற்றிக் கோப்பைகளும் விருந்தினர்களால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

IMG 20240229 140752 IMG 20240229 142858 IMG 20240229 143204 IMG 20240229 134834

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.