யாழ். வைத்தியசாலையில் O+ இரத்த வகைக்கு தட்டுப்பாடு ! பொதுமக்களிடம் விடுத்த வேண்டுகோள் !

106

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் O+ இரத்த வகைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் அந்த வகை இரத்தம் உள்ள குருதி கொடையாளர்கள் யாழ்.இரத்த வங்கிக்கு நேரில் வருகை தந்து குருதி கொடை வழங்குமாறு இரத்த வங்கியினர் அறிவித்துள்ளனர்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் இரத்த தான முகாம்களை நடாத்த விரும்புவோரை அதற்கான முயற்சிகளை முன்னெடுக்குமாறும் , மேலதிக விபரங்களை தெரிந்து கொள்வதற்கு 0772105375 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.