யாழ் மாவட்ட வர்த்தகர்களுக்கு VAT தொடர்பில் விழிப்புணர்வு..!{படங்கள்}

55

யாழ்ப்பாண மாவட்ட வர்த்தகர்களுக்கான VAT தொடர்பான விழிப்புணர்வும்

ஆரோக்கியமான வியாபார சூழலை உருவாக்குதலும் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட  பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் இணைப்பதிகாரி  ந.விஜிதரன் தலைமையில்  இன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ்ப்பாண பிராந்திய இறைவரித் திணைக்கள உதவி ஆணையாளர் செல்வி.மு.சிந்துஜா ஆகியோர் கலந்துகொண்டதோடு, ஆரோக்கியமான வியாபார சூழலை உருவாக்குதல் தொடர்பாக கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள்.

மேலும் இக் கலந்துரையாடலில் சதொச நிறுவன முகாமையாளர், காகில்ஸ் நிறுவன முகாமையாளர், ப.நோ.கூட்டறவு சங்க முகாமையாளர்கள், வர்த்தகர்கள், வியாபார உரிமையாளர்கள், வியாபார முகவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

FB IMG 1709113919955 FB IMG 1709113928652 FB IMG 1709113924008 FB IMG 1709113926229

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.