யாழ் மாவட்ட செயலாளர்-பிரியா விடை..!{படங்கள்}

133

யாழ் மாவட்ட செயலகத்தின் மாவட்ட செயலராக கடமையாற்றி ஓய்வு நிலை பெற்று செல்லும் அம்பலவானர் சிவபாலசுந்தரனுக்கு இன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பிரியாவிடை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்ட செயலகத்தின் முன்றலில் இருந்து தமிழர்களின் பாரம்பரிய தமிழ் கலை வடிவங்களுடன் வரவேற்கப்பட்டு தொடர்ச்சியாக கடமையினை உத்தியோகபூர்வமாக மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்கு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

தொடர்ந்து யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரியாவிடை நிகழ்வுகள் இடம்பெற்றது.இதன்பொழுது யாழ் மாவட்ட செயலரின் நினைவுகளை தாங்கிய “அருமருந்தென்ன “என்ற தலைப்பிலான இறுவட்டு மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்களால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

யாழ் மாவட்ட செயலராக கடந்த
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
தனது கடமைகளை பொறுப்பேற்ற மாவட்ட செயலர் 1992 மார்கழி மாதம் அரச சேவையில் இணைந்து கொண்டார் .1995 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுகளின் பொழுது யாழ் மாவட்ட செயலர் அம்பலவானர் சிவபாலசுந்தரன்,அவரது குடும்பத்தினர்,
மேலதிக அரசாங்க அதிபர்கள் , பிரதேச செயலர்கள் ,உதவி பிரதேச செயலர்கள் ,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,அலுவலக உதவியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
IMG 20240307 WA0140

IMG 20240307 WA0158

IMG 20240307 WA0157

IMG 20240307 WA0141

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.