யாழ் மத்திய கல்லூரியின் பெண் அதிபர் நியமனம் ரத்து..!

204

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக நியமன கடிதம் வழங்கப்பட்ட பெண் அதிபராக திருமதி செல்வ குணபாலனின் நியமனத்தை தற்காலிகமாக இடம் நிறுத்துவதாக கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரகரா எழுத்து மூலமான கடிதத்தை அனுப்பியுள்ளார்.

 

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது செயலாளரினால் 22.02.2024 ல் திகதி இடப்பட்ட Ese/App/SLps/04/11/2023 கடிதத்தின் பிரகாரம் மத்திய கல்லூரி அதிபராக நியமிக்கப்பட்ட உங்கள் நியமனத்தை தற்காலிகமாக இடை நிறுத்துவதாக தெரிவித்துக் கொள்கிறேன்.

 

பொதுச் சேவை ஆணைக்குழுவின் கீழ்  நிறுவப்பட்ட கல்வி சேவை குழு வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம் கல்வி அமைச்சின் செயலாளர் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.