யாழ் எரிபொருள் நிலையத்தில் ஊழியர் செய்த கூத்து-பின்னர் நேர்ந்த பரிதாபம்..!

124

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினை திருடிய சந்தேக நபரை நேற்று  நெல்லியடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சிசிடிவி கமராக்களை பரிசோதித்தால், அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பது தெரியவரும் என்பதால், கமராக்கள் மூடப்பட்டதாக, இரண்டு ஊழியர்களும் காவல்துறையிடம் வாக்குமூலம் அறித்துள்ளனர்.

 

இதன்போது, ​​எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழைந்த சந்தேக நபர் ஒருவர் ஊழியர் ஒருவரின் கைத்தொலைபேசியையும்,

எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பணத்தில் ஒரு இலட்சம் ரூபாயையும் திருடிச் சென்றுள்ளார்.

 

இது தொடர்பில் நெல்லியடி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து ஏனைய இடங்களில் உள்ள சிசிடிவி கமெராக்களை சோதனையிட்ட காவல்துறையினர்  சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.