யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு.

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் இராணுவத்தினர் பார்வையிட்டு காணிகளை பொதுமக்களிடம் கையளித்தனர்.
ஜே – 235 காங்கேசன்துறை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் 20.32 ஏக்கர் காணி 52 பேருக்கும், ஜே – 240 தென்மயிலை கிராம சேவையாளர் பிரிவில் 25.02 ஏக்கர் காணி 41 பேருக்கும் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆவண பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

ஜே -241 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதி எதிர்வரும் 20ம் திகதிக்கு பின்னர் விடுவிக்கப்படுமென தெல்லிப்பழை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் பழைய வீடுகளின் கதவு, நிலை, உள்ளிட்ட பொருட்களை திருடிச் செல்லும் வாய்ப்பு காணப்படுவதால் காணிகளுக்கு உரிய பாதுகாப்பை மேற்கொண்டு தருமாறு காணிகளை பார்வையிட்ட காணி உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

IMG 20240312 WA0135

IMG 20240312 WA0137

IMG 20240312 WA0138

IMG 20240312 WA0140

IMG 20240312 WA0141

IMG 20240312 WA0143

IMG 20240312 WA0145

IMG 20240312 WA0146

IMG 20240312 WA0149

IMG 20240312 WA0152

IMG 20240312 WA0156

IMG 20240312 WA0157

IMG 20240312 WA0161

IMG 20240312 WA0162

IMG 20240312 WA0164

Comments are closed.