யாழ்ப்பணம் இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 13 ஆவது சமர்!

140

யாழ்ப்பாண இந்துக் கல்லூரி அணிக்கு எம்.கஜனும், கொழும்பு இந்துக்கல்லூரிக்கு b.தாருஜனும் தலைமை தாங்கினர். நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு இந்துக்கல்லூரியின் தலைவர் துடுப்பாட்டத்தினை தெரிவுசெய்ய, யாழ்ப்பாண இந்துக்கல்லூரி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீர்ரகளாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் வலது கை துடுப்பாட்ட வீர்ர்களான p.ஸ்ரீநிதுசன் மற்றும் p.யாதவ் களமிறங்கி துடுப்பெடுத்தாடினர். ஆரம்பத்தில் நிதானமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த கொழும்பு இந்துக்கல்லூரி அணி வீரரான ஸ்ரீவிதுர்சன் 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 12 (33) ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சுபர்ணனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய கொழும்பு இந்துவின் அணித்தலைவரும் வலதுகை துடுப்பாட்ட வீர்ருமான b.தாருஜன் களமிறங்கினார் தாருஜன் யாதவ் இணைப்பாட்டம் நிதானமாக ஆடப்பட்டுக்கொண்டிருக்கும்போது மிக நிதானதாக ஆடிய யாதவ் சாருஜனின் பந்துவீச்சில் 45 பந்துகளை எதிர்கொண்டு 2 நான்கு ஓட்டங்களுடன் மொத்தமாக 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.எஸ்.மிதுசிகன் ஓட்டமெதுவும் பெறாமல் ஹரிகரனின் பந்துவீச்சில் பிரீமிகனிடம் பிடிபொடுத்து ஆட்டமிழந்தார்.

ரி.சந்தோஷ் 26 பந்துகளை எதிர்கொண்டு 3 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஹரிகரனின் பந்துவீச்சில் பிரீமிகனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய கொழும்பு இந்துக்கல்லூரி அணி மதிய இடைவேளையின் பின்னர் 55.1 ஓவரில் 80 ஓட்டங்களுடன் சகல விக்கெற்றுகளையும் இழந்தது. இதில் நிதுசன் அதிகூடிய ஓட்டங்களாக 33 பந்துகளில் 12 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சார்பில் கரிகரன் சுபர்னன் ஆகியோர் தலா மூன்று இலக்குகளை வீழ்த்தினர் . தற்பொழுது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் யாழ்ப்பாண இந்துக்கல்லூரி அணி விக்கெற் இழப்பின்றி 60 ஓட்டங்களை பெற்று ஆடிவருகிறது.

VideoCapture 20240315 161151

VideoCapture 20240315 161204

VideoCapture 20240315 161233

VideoCapture 20240315 161303

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.