யாழில் பெண்ணொருவரின் கைப்பை அபகரிப்பு!! CCTV கமராவால் இருவர் கைது

0 11

ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த பெண்ணொருவரின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் சங்கானையைச் சேர்ந்த 28 வயது பெண் மற்றும் 21 வயது ஆண் சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்ய வந்த வெளிநாட்டு பெண்ணின் கடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் , 500 யூரோ , 20,000 ரூபாய் அடங்கிய கைப்பையே பெண்ணொருவரால் நூதனமான முறையில் அபகரிக்கப்பட்டது.

திருட்டுச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வெளிநாட்டவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

கண்காணிப்பு கமராவின் உதவியுடன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.