யாழில் நடுவீதியில் உறங்கும் மாடுகளால் சாரதிகள் பீதி..!{படங்கள்}

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கு பருத்தித்துறை பிரதான வீதியில் கட்டாக்காலிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் சாரதிகள் பல்வேறு அசெளகரியங்களை சந்தித்துவருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

செம்பியன்பற்று தெற்கில் வசிக்கும் ஒரு சிலரின் பொறுப்பற்ற செயலால் பகல்,இரவு வேளைகளில் அதிகளவான மாடுகள் வீதியில் படுத்து உறங்குவதால்  விபத்து சம்பவங்கள் பதிவாகுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மருதங்கேணி வைத்தியசாலையில் இருந்து உரிய நேரத்தில் நோயாளிகளை  கொண்டு செல்வதற்கு தடையாக மருதங்கேணி தெற்கு பிரதான வீதி காணப்படுவதால் கட்டாக்காலிகளை அகற்றுமாறு கோரி மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை வைத்தியர் Dr. நரேந்திரன் அவர்களால் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டது.

மருதங்கேணி தெற்கு கிராம அலுவலருக்கு விடயம் தொடர்பாக அறிவித்தும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இரவு நேரங்களில் நடுவீதியில் படுத்துறங்கும் கட்டாக்காலி மாடுகளை அப்புறப்படுத்தி தாங்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு வழிவகை செய்யுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

IMG 20240228 152039 IMG 20240228 152103 IMG 20240228 152331

Comments are closed.