முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!

0 12

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று 25.01.2024 இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரவ பட்டாவாகனமும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பட்டா வாகனத்தில் பயணித்த சுதந்திரபுரம் பகுதியினைசேர்ந்த சுதந்;திரபுரம் பகுதியினை சேர்ந்த நவீன் என்ற இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வெளை உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தின் சாரதியினை கைதுசெய்துள்ளதுடன் விபத்திற்குள்ளான இரண்டு வாகனங்களையும் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள்

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.