முன்னாள் புலி உறுப்பினர் – விசாரணை முன்னெடுக்கும் புலனாய்வுத்துறை.

இலங்கையின் வடக்கில் முன்னாள் போராளிகளை புலனாய்வு துறையினர் விசாரணை செய்யும் நடவடிக்கைகள் மீண்டும் தலை தூக்கி உள்ளது.

இந்த நிலையில் புலிகள் இயக்கத்தின் கடற்கரும்புலியாக செயல்பட்டு புலம்பெயர் நாடு ஒன்றில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தஞ்சமடைந்துள்ள மன்னாரைச் சேர்ந்த உயிர் மாறன் என அழைக்கப்படும் சகாயநாதன் சந்தியாப்பு என்பவர் தொடர்பாக புலனாய்வு துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

2004 ஆம் ஆண்டு முதல் கடற்கரும்புலியாக செயல்பட்டு வந்த உயிர் மாறன் என அழைக்கப்படும் சகாயநாதன் சந்தியாப்பு 2008 ஆம் ஆண்டு கடல் மார்க்கமாக இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

பின்னர் 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து மனைவி மற்றும் பிள்ளைகளுடன் புலம்பெயர் நாடு ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வருடம் அவருடைய மன்னாரில் உள்ள வீட்டிற்குச் சென்ற புலனாய்வு துறையினர் அவரை விசாரணை செய்துள்ளனர்.

இந்த நிலையில் உயிர் மாறன் என அழைக்கப்படும் சகாயநாதன் சந்தியாப்பு என்பவரை தற்போது இராணுவ புலனாய்வு துறையினர் விசாரணை செய்து அவர் தொடர்பான விபரங்களை திறட்டி வருகின்றனர்.

WhatsApp Image 2024 03 14 at 1.16.47 PM (1)

இவ்வாறான சூழ்நிலையில் குறித்த நபர் குடும்பத்துடன் இலங்கைக்கு திரும்ப முடியாத நிலையில் அச்சமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை புலம்பெயர் நாடொன்றில் புகலிட கோரிக்கை கோரிய இளைஞன் கடந்த பல வருடங்களாக புலம்பெயர் நாடொன்றில் வசித்து வரும் நிலையில் குறித்த இளைஞனை விசாரணைக்காக அழைத்துள்ளனர்

வவுனியா ஓமந்தை பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் ரதீபன் (32) என்ற இளைஞனே கொழும்பு பயங்கரவாத மற்றும் குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் மீண்டும் தொடர்ச்சியாக இளைஞர்கள் கைதாவதும் இ விசாரணை என்ற பெயரில் அழைக்கப் படுவதும் தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை தோற்று வித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.