மாந்தை மேற்கில் முதியோருக்கான மருத்துவ முகாம்..!

0

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள அடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (1) வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
IMG 7685

IMG 7701

அடம்பன்,ஆண்டாங்குளம்,உயிலங்குளம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் மருத்துவத் தேவைகளை நிறைவேற்ற முடியாத 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் நலன் கருதி, இந்த விசேட மருத்துவ முகாம் மற்றும் மாற்றாற்றல் உடையவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலகங்களில் முதியவர்களுக்கான விசேட செயற்திட்டங்களை மெதடிஸ் திருச்சபை டெவ்லிங் நிறுவனம் நடாத்தி  வருகிறது.  அதன் ஒரு பகுதியாகவே இன்றையதினம் இலவச  மருத்துவ முகாம் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  இடம்பெற்றது.

குறித்த மருத்துவ முகாமின் ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,முன்னாள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்,டெப்லிங் நிறுவனத்தின் பிரதான இணைப்பாளர் அருட்பணி.G. அன்ரனி சதீஸ் ,பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள், அருட்தந்தையர்கள்,மெதடீஸ் திருச்சபை டெவ்லிங் நிறுவன மாவட்ட இணைப்பாளர், திட்ட இணைப்பாளர், வைத்தியர்கள், தாதியர்கள், இயன் மருத்துவர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் உட்பட 3 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட முதியவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது முதியவர்களுக்கான மருத்துவ சிகிச்சை உட்பட   சக்கர நாற்காலி, ஊன்றுகோல் மற்றும் கண்ணாடிகள், செவிப்புலன் கருவிகளும் வழங்கப்பட்டன. அதே நேரம் உளவள ஆரோக்கியம் மற்றும் மருத்துவ ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகளும்  இடம் பெற்றது.

குறித்த நிறுவனத்தினால் இதுவரை மன்னார் மாவட்டத்தில் 10 மருத்துவ முகாம்கள் இடம் பெற்றுள்ளதுடன்  மருத்துவ முகாமுக்காக 3 மில்லியன் ரூபாவும்,தேவையுடையவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்கு  4 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்படுள்ளமை குறிப்பிடத்தகது.
IMG 7662

IMG 7693

IMG 7728

Leave A Reply

Your email address will not be published.