மட்டு கொக்கட்டிச்சோலையில் கசிப்பை தேடி பொலிசார் தொடர் வேட்டை உற்பத்தி நிலையம் முற்றுகை 65 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது 15 பீப்பாக்கள் மீட்பு—

0

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பளாந்துறை பாடசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சட்டவிரோ கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்று வியாழக்கிழமை (1) மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினர் முற்றுகையிட்டதையடுத்து கசிப்பு உற்பத்தியல் ஈடுபட்ட ஒருவரை 85 போத்தல் கொண்ட 65 லீற்றர் கசிப்புடன் கைது செய்ததுடன் 15 பீப்பாக்கள் மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டு ஒப்படைத்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

யுக்தி தேசிய நடவடிக்கையின் கீழ் கொக்கட்டிச்சோலையில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை முற்றாக ஒழிக்கும் திட்டத்தில் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ.எதிரிமான்னவின் வழிகாட்டலில் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தலமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினம் இன்று பகல் குறித்த வீதியிலுள்ள கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனனர்.

இதன் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 85 போத்தல் கொண்ட 65 லீற்றர் கசிப்பும் 15 பீப்பாக்கள் மற்றும் உற்பத்திக்கான உபகரணங்களை மீட்டு கொக்கட்டிச்சோலை பொலிசரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்துக்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ.எதிரிமான சென்று இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரையும் கைப்பற்றப்பட்ட கசிப்பு மற்றும் பீப்பாக்களை பார்வையிட்டு பொலிசருக்கு பாராட்டு தெரிவித்து தொடாந்தும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை கண்டுபிடித்து கைது செய்யுமாறு ஆலோசனைகள் வழங்கினர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

IMG 0877 IMG 0881

Leave A Reply

Your email address will not be published.