மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரியின் 20வது அதிபராக க.சுவர்ணேஸ்வரன் பதவியேற்பு.

100

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரின் 20 வது அதிபராக க.சுவர்ணேஸ்வரன் அவர்கள் இன்று பதவியேற்றார்.

இன்று காலை பாடசாலை அதிபர் கே.குகதாசன் தலைமையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் புதிய அதிபர் க.சுவர்ணேஸ்வரன் அவர்கள் பாடசாலை மாணவர்களின் பான்ட் வாத்தியம் முழங்க அதிதிகள் சகிதம் மலர்மாலை அணிவித்து வெகு விமர்சையாக வரவேற்கப்பட்டார்.

இதன் போது பாடசாலையின் சரஸ்வதி சிலையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று, மும்மத மதகுருமாரின் ஆசியுடன் சுப வேளையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இதன் பின் புதிய அதிபரினை முன்னாள் அதிபர் கே.குகதாசன் வரவேற்று பேசியதுடன் , முன்னாள் அதிபருக்கான நன்றி செலுத்தும் நிகழுவும் பாடசாலை சமூகத்தினரால் நடாத்தப்பட்டது.

நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொதுமேலாளர். சுவாமி சிறிமத்.நீலமாதவாணந்தாஜீ மகராஜ், செங்கலடி இந்து மதகுருமார் ஒன்றிய குருமார், கிரான் மெதடிஸ்த திருச்சபையின் போதகர், ஏறாவூர் கோட்டக்கல்வி அலுவலக திட்டமிடல் பணிப்பாளர் ஈ.தட்சணாமூர்த்தி , மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா பாடசாலைச் சமூகம், செங்கலடி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

IMG 20240315 WA0092

IMG 20240315 WA0093

IMG 20240315 WA0095

IMG 20240315 WA0096

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.