பெண்ணின் சடலம் மீட்பு.!

133

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகசேணை தபால் அலுவலகத்தின் பின் பகுதியில் தலவாக்கலை மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் அகரகந்தை ஆற்றில் இனம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

நாகசேணையிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி பஸ்சில் பயணித்த பயணிகள் குறித்த ஆற்றில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்து இது தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அத்துடன் பிரதேச மக்களுக்கும் இவ்விடயம் தெரிய வந்துள்ளது.இருப்பினும் சடலமாக தண்ணீரில் கிடக்கும் பெண் தொடர்பில் தகவல் இதுவரையும் இல்லை என விசாரணைகளை ஆரம்பித்துள்ள லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் இந்த விடயம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் சம்பவ இடத்திற்கு நீதவான் வருகை தந்து சடலத்தை பார்வையிட்டேன் பின் சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.