பெண்ணின் இடுப்பு பகுதியை தொட்ட நபரிற்கு நேர்ந்த கதி

0 16

கடமைக்குச் சென்றுக்கொண்டிருந்த பெண்ணின், இடுப்பு பகுதியை தொட்டுவிட்டுச் சென்ற நபரை துரத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

பகல்வேளை கடமைக்குச் செல்லும் அப்பெண், தனது கடமைகளை முடித்துக்கொண்டு இரவில் வீட்டுக்குத் திரும்புவர் என்று அறியமுடிகின்றது.

அந்தப் பெண் பணியாற்றும் காரியாலயம் வீட்டுக்கு நடந்துச் செல்லும் தூரத்தில் இருப்பதனால், வீட்டிலிருந்து காரியாலயத்துக்கு நடந்தே சென்று, நடந்தே வீட்டுக்கு திரும்புகிறார்.

அவ்வாறு, செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் 1.30 மணியளவில் காரியாலயத்துக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, எதிரே நடந்து வந்துக்கொண்டிருந்த இனந்தெரியாத நபர், அப்பெண்ணை, இடுப்பு பகுதியில் தொட்டுவிட்டு ​அவ்விடத்திலிருந்து விரைவாக கடக்க முயன்றுள்ளார்.

எனினும், ஆவேசமடைந்த அந்தப்பெண், கூச்சலிட்டுள்ளார். அபாயக் குரலைக்கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்துக்கொண்டனர். பகலுணவு வேளை என்பதால், அந்த சம்பவம் நடத்த இடத்தில், பல நிறுவனங்கள், காரியாலயங்கள் இருப்பதால், பகலுணவை வாங்குவதற்காக பலரும் வெளியில் வந்திருந்தனர்

அவ்விடத்துக்குச் சென்ற அப்பெண், தன்னிடமிருந்த சிறிய குடையில், கைப்பிடியை நீட்டி, அந்த நப​ரை தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால், அந்த புதுக்குடை நெளிந்துவிட்டது.

தன்னுடைய ஆத்திரத்தை தாங்கிக்கொள்ள முடியாத அப்பெண், செருப்பையும் கழற்றி தாக்கியுள்ளார். குடை, செருப்பு பூஜைகளை செம்மையாக வாங்கிக்கொண்ட அந்த நபர், ‘சமாவென’ (மன்னிக்கவும்) எனக் கூறிவிட்டு, ஆளைவிட்டால் போதும் சாமியென அவ்விடத்திலிருந்து சென்றுவிட்டார்.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.