பிரபல தனியார் வைத்தியசாலையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் புழு!:

0 12

கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்த காணொளியானது தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

குறித்த காணொளியில், இதயநோயாளியான தனது தந்தைக்கு உணவளிப்பதற்காக உணவுப் பொதியைத் திறந்த போது, அதில் ஒரு பெரிய புழு இருந்ததாகவும், ‘அது கோலிபிளவர் செலட்டில் இருந்து வந்திருக்கலாம்’ எனவும் நோயாளியின் மகள் வைத்தியசாலை ஊழியர்களிடம் பேசுவதை அவதானிக்கமுடிகின்றது.

மேலும், வைத்தியசாலையொன்றில் வழங்கப்படும் உணவு இவ்வாறு தரமற்றிருப்பது பொருத்தமற்றது. இந்த உணவு, இதயநோய் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்டது எனவும் காணொளியின் உரையாடலின் மூலம் அறியமுடிகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.