பலம்வாய்ந்த கட்டைக்காடு சென்மேரிசை வீழ்த்திய சமரபாகு நியூட்டன்..!{படங்கள்}

85

வடமராட்சி லீக் அனுமதியுடன்

 AA.SPORTS பிரதான அனுசரனையோடு கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு 09 நபர் கொண்ட யாழ் மாவட்ட ரீதியிலான றேஞ்சஸ் வெற்றிக்கிண்ணம் 2024 உதைபந்தாட்ட சுற்று போட்டியின் வியாழக் கிழமை (28.02.2024)இடம்பெற்ற  ஆட்டத்தில் பலம் வாய்ந்த கட்டைக்காடு சென்மேரிஸ் அணி தோல்வியை சந்தித்தது.

கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து சமரபாகு நியூட்டன் அணி மோதியது. இரு அணிகளும் ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் பாதியாட்டத்தில் நியூட்டன் அணி தமது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இரண்டு கோல்களை பெற்று முன்னிலை வகித்தது.

  இரண்டாம் பாதியாட்ட ஆரம்பத்தில் இரண்டு அணிகளும்  புதிய கள வியூகங்களோடு ஆடத்தொடங்கினர். சென்மேரிஸ் அணி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனாலும் நியூட்டன் அணியின் பின்களத்தினை முறியடிக்க முடியவில்லை. தொடர்ந்து தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இரு அணிகளும் கோல்களை பெற்றுக் கொள்வதற்கு கடுமையாக போராடினார். அதன் பயனாக சென்மேரிஸ் அணி தமது அணிக்கான முதலாவது கோலை சிறப்பான முறையில் பதிவு செய்தது.

 ஆட்டத்தின் முடிவில் மேலதிக கோல்களின்றி 02:01 என்ற கோல் கணக்கில் நியூட்டன் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

FB IMG 1709192997699 FB IMG 1709192984478 FB IMG 1709192994464 FB IMG 1709192990630

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.