பரந்தன் வீதியில் திடீரென சரிந்த மரம்-தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்

0 13

பரந்தன் சந்திக்கருகில் வீதியோரமாக நின்ற மரம் இன்று மதியம் அளவில் திடீரென சரிந்து வீதியில் விழுந்ததில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன்,மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

வாகனங்களின் வரத்து அதிகமாக காணப்பட்டவேளையிலும் இந்த அனர்த்தத்தால் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பயணிகள் குறித்த இடத்தை கடக்கும் சமயத்தில் மரம் சரிந்திருந்தால் பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கக்கூடுமெனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடன் அறிவிக்கப்பட்டதை அடுத்து A9பிரதான வீதியில் திடீரென சரிந்து விழுந்த பாரிய மரத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

IMG 20240201 134823 IMG 20240201 134803 IMG 20240201 134713

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.