பணியிடமாற்றம்-யாழில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த அபிவிருத்தி உத்தியோகத்தர்..!

226

அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு
உயிரிழந்துள்ளார்.

பணி இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியால், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா (வயது 49 திருமணமாகவில்லை) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வரும் நிலையில் இவருக்கு இடமாற்றம் கிடைத்தது. ஆகையால் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்நிலையில் இன்றையதினம் அவரது இல்லத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.