நிகழ்நிலை சட்டத்தில் முதன் முதலாக ஒருவர் கைது

157

சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபரை குற்ற விசாரணைத் திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் குறித்த சந்தேக நபர் தீங்கிழைக்கும் வகையில் இந்த அவதூறு பரப்புரைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அவர் சமூக ஊடகங்கள் மூலம் எங்களை அவதூறாகப் பேசினார். கைது செய்யப்பட்ட போது, அவரிடம் ரூபா 4 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதற்காகத்தான் இணையவழி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இந்த பரப்புரைகள் அரசை மாற்றுவதற்கு கூட பயன்படுத்தப்படலாம்” என்று அவர் கூறினார்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.