நாளையும் மீனவர்கள் யாழில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு..!

129

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கோரி, வடக்கு மாகாண மீனவர்கள் நாளையதினம் யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்தாக அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அன்னலிங்கம் அன்னராசா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த பேரணியில் அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

நாளை (05) காலை 10:30 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பு ஆரம்பமாகும் குறித்த பேரணில் இலங்கை ஜனாதிபதிக்கான மகஜரை வடக்கு மாகாண ஆளுநர் ஊடாகவும், பாரதப் பிரதமருக்கான மகஜரை இந்திய துணைத் தூதுவர் ஊடாகவும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.