ஜேர்மன் நாட்டின் மிசறியோ நிறுவன இலங்கைக்கான பொறுப்பதிகாரி யாழ் ஆயருடன் சந்திப்பு..!{படங்கள்}

137

ஜேர்மன் நாட்டின் மிசறியோ நிறுவன இலங்கைக்கான பொறுப்பதிகாரி கொரினா பிறோக்மன் அவர்கள் கரித்தாஸ் கியூடெக் நிறுவன செயற்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் மிசறியோ நிறுவன ஆலோசகர் உல்றைக் வைன்ஸ்பாஜ்ச், கரித்தாஸ் கியூடெக் தேசிய இயக்குநர் அருட்தந்தை லூக் நெல்சன் பெரேரா, சமாதான நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் அருட்சகோதரி தீபா பெர்னாண்டோ, தேசிய  நிறவன இணைப்பாளர் சோபன்ஜானி, யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை யூயின் பிரான்சிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

IMG 20240217 210122 IMG 20240217 210044

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.