ஜனாதிபதி தனது மானத்தை காப்பாற்ற கேட்டதற்காக சுமந்திரன் கூட்டத்திற்கு சென்றிருக்கலாம் – நா.உ. கோவிந்தன் கருணாகரன்

116

ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் எம். சுமந்தரனிடம் நீ யாவது வந்து எனது மானத்தை காப்பாற்று என கேட்டிருக்கலாம் ? அதனால் அவர் தனிப்பட்ட ரீதியில் சர்வதேச நாணய நிதிய கூட்டத்திற்கு சென்று இருக்கலாம் எனவே அவர் கூட்டத்திற்கு சென்றதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள நா. உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாடு தற்போதும் பொருளாதார ரீதியில் உலகத்தில் இருந்து அந்நியப்பட்டிருக்கின்றது எனவே இந்த நாட்டு நிலைமையை உணர்ந்து கொள்ளாமல் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சிவராத்திரி தினம் இந்துக்களுக்கு ஒரு முக்கியமான தினம் சிவபெருமான் இந்துக்களின் முதல் முதல் கடவுள் இந்த நிலையில் சிவராத்திரிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட ஆலைய குரு மற்றும் பக்தர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொல்பொருள் திணைக்களம் என்கின்ற ரீதியிலே எங்கள் பிரதேசங்கள் பல கபளீகரம் செய்ப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் வெடுக்குநாறி மலையும் கபளீகரம் செய்யப்படுகின்றது

இந்த நேரத்தில்; இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் வடகிழக்கில் அமைதியை கொண்டுவரவேண்டும் 13 திருத்த சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் புலம் பெயர் தேசத்தில் இருக்கின்ற தமிழ் தனவந்தவர்கள் இலங்கையில் வந்து முதலிடவேண்டும் என அரசாங்கமும் ஜனாதிபதியும் வாய்கிழிய கூறிக் கொண்டு மறைமுக நிகழ்சி நிரலில் வடகிழக்கில் தமிழினத்தின் கலை கலாச்சாரத்தை ஒழிக்கும் ஒரு வேதை;திட்டமாக இந்த வெடுக்குநாறி சம்பவத்தை பார்கின்றோம்.

அரசியல் அமைப்பின் பிரகாரம் கடந்த காலங்களில் மாகாணசபை உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் பிற்போடப்பட்டுள்ளன. அதேவேளை பாராளுமன்றத்தை கூடி எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனபதிபதிக்கு இருக்கின்றது ஆனால் எதிர்வரும் ஜப்பசி மாதத்திற்கு முன்னர் அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடாத்தியாக வேண்டும் அதற்கு உரிய பணம் கடந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வருடத்தில் இரண்டு தேர்தல் வைப்பதாக இருந்தால் பாராளுமன்றத்தில் குறை நிறை பிரேரனை ஒன்றை கொண்டுவந்து நிதியை ஒதுக்கிதான் தேர்தலை வைக்கமுடியும் எழுந்தமானமாக இரண்டு தேர்தல்களை வைப்பதற்கான சாத்திய கூறு இல்லை.

வடக்கு கடலில் இந்திய மீனவர்கள் அத்துமீறல் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனை இதனை இலங்கை அரசு இந்திய அரசுடன் பேசவேண்டும். அதேவேளை தமிழனாக இருக்கின்ற கடல் தொழில் அமைச்சர் முயற்சி செய்து கொண்டிரு க்கின்றார். அவர் தன்னுடன் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒத்துழைத்தால் தமிழ் நாடு அரசுடன் பேச தயாராக இருப்பதாகவும் அப்படி ஒரு அழைப்பு அரசு ஊடாக வருமாக இருந்தால் நாங்கள் எமது மீனவர்களின் பிரச்சனையை தீர்க்க ஆயத்தமாக இருக்கின்றோம்.

அதேவேளை புதிதாக தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சி நா.உ சி.சிறீதரனுக்கு ஜனாதிபதியின் அழைப்பு விடுத்தபோது அவர் அதனை நிராகரித்தாக ஊடகங்கள் ஊடக அறிந்தேன் அதனை ஏனைய எதிர்கட்சிகளும் பகிஸ்கரித்துள்ளனர் இந்த நிலையில் எம்.சுமந்திரன் பங்கு பங்குபற்றியிருந்தார் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை

இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் றோயல், தோமஸ் கல்லூரி அணிகளுக்கிடையே இடம்பெற்ற கிரிக்ட்போட்டியில் சுமந்திரன் ஜனாதிபதி ரணில் அருகில் இருந்து கண்டுகளித்தனர் இதன் போது ஜனாதிபதி தனிப்பட்டரீதியில் சுமந்திரனிடம் நீ ஆவது வந்து மானத்தை காப்பாற்ற கூட்டத்திற்கு வருமாறு என்ற ரீதியில் கேட்டிருக்கலாம் அதற்காக அவர் சென்றிருக்கலாம்?

தற்போதைய வெளிநாட்டு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தமிழர்கள் சமஸ்டியை கோருவதற்கு உரித்துடையவாகள் என பேசியதை வவேற்கின்றேன் அவர் தற்போது உணர்ந்திருக்கின்றார் அதேபோல ஜனாதிபதி உட்பட ஏனைய அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே அதிகாரங்களை பரவலாக்கி மாகாணங்களுக்கு அதிகாரங்களை கொடுத்தால் புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்த நாட்டிலே வந்து முதலீடுகள் செய்ய தயாராக இருக்கின்றனர்.

அதிகாரங்கள் பரவலாக்கப்படாமல் அவர்களது முதலீடுகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் அவர்கள் எக்காரணம் கொண்டும் வரமாட்டார்கள் வருகின்ற ஒரு சிலரை புலி பினாமிகள் என கூறும் அளவிற்கு இந்த நாட்டு அரசியல்வதிகள் இருக்கின்றன்

ஸ்ரீ லங்கா ரொலிக்கோம்மை தனியார் மயப்படுத்த அரசாங்கம் எத்தனிக்கும் போது தமிழனான லைக்கா நிறுவனத்தில் உரிமையாளர் அதனை வாங்க முயற்சிக்கும் போது அவர் தமிழன் என்பதற்காக அதை கொடுக்க கூடாது என கூறும் அரசியல்வாதிகள் இருந்தால் இந்த நாடு எக் காலத்திலும் உருப்படாது

69 சிங்களவாக்குகளால் ஆட்சிக்குவந்த கோட்டா அரக்கல போராட்டம் ஊடாக பலவந்தமாக வெளியேற்ப்பட்டார் அவர் வெளியிட்ட புத்தகத்தில் சிறுபான்மையான தமிழ் முஸ்லீம்கள் செய்த சதிவலையால் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது மீண்டும் ஒரு இனவாதத்தை இனமுறுகலை குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு சதியாக பார்க்கின்றோம்.

அவர் 2019 எப்படி ஈஸ்ரர் குண்டுவெடிப்பை உருவாக்கி அதன் மூலமாக ஜனாதிபதியாக வந்தவர் என்பது இந்த நாட்டு மக்களுக்கு தெரியும் அவர் என்ன சதி செய்து இந்த நாட்டு ஜனாதிபதியாக வந்தேரே அதே சதியினால் வீழ்தப்பட்டார் என்பது தான் உண்மை.

எனவே இந்த நாட்டில் சுபீட்சமான இன ஜக்கியம்ஏற்பட வேண்டுமாயின் அதிகாரங்கள் பலவலாக்கப்படவேண்டும் என்றார்.IMG 1468 (1)

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.