சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க ஓட்டோவில் சுற்றுலா

இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுலா ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இந்த சுற்றுலாவானது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – சக்கோட்டை முனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

மூன்று இளைஞர்களும் முச்சக்கர வண்டி மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களையும் 40 நாட்களில் சுற்றிவரவுள்ளனர்.
IMG 20240205 WA0193

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்து வீழ்ச்சி அடைந்ததனால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சுற்றுலாத் துறையை மீண்டும் வளர்ச்சியடைய செய்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் வரவழைத்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரித்து பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த சுற்றுலாப் பயணத்தினை தாங்கள் ஆரம்பித்துள்ளதாக குறித்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

Comments are closed.