சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த உதவிகளும், வாராந்த நிகழ்ச்சிகளும்….!{படங்கள்}

20

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவகலை பண்பாட்டுப் பேரவையின் வாராந்த நிகழ்வுகள் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் நேற்று காலை 10:30 மணியளவில் இடம் பெற்றது.

இறை வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் சைவப் புலவர் திருமதி அண்முகவடிவு தில்லைமணி அவர்களால்  குமரகுருபரர் சுவாமிகள் பற்றிய ஆன்மீக அருளுரை  காலை 10.40 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை  இடம்பெற்றதை தொடர்ந்து வாராந்த உதவிகளாக. யா/ஆனைக்கோட்டை அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் – 01 வகுப்பில் புதிதாக இணைந்த  16 மாணவர்களுக்கு காலணிகளை பெற்றுக் கொள்வதற்க்காக  பாடசாலை முதல்வர்  சி.மதிபாலனிடம் ரூபா  40,000  நிதியும்,

புத்தளம் – சேனைக்குடியிருப்பு ஶ்ரீ பத்தினி அம்மன் அறநெறிப் பாடசாலை கட்டிட கட்டுமானத்திற்காக ரூபா 190,000 நிதியும், வழங்கிவைக்கப்பட்டன.

இதில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், நலன்விரும்பிகள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், அடியார்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

IMG 20240216 WA0137 IMG 20240216 WA0142 IMG 20240216 WA0138 IMG 20240216 WA0136

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.