சடலங்களுடன் உறவு கொள்ளும் மனிதர்கள் – வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

0 17

இலங்கையில் சமீப காலமாக உயிரிழந்த சடலங்களுடன் உறவு கொள்ளும் மற்றும் சடலங்களை பயன்படுத்தி பூஜைகள், வழிபாடுகள் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது.

இது ஒரு பாரிய பிரச்சினையாகவே சமூகத்தில் தற்போது பார்க்கப்படுகின்றது. காரணம் ஒரு உயிரிழந்த சடலத்தின் மீது உணர்வுகள் தோன்றுதலானது, மிகவும் அரிய ஒரு செயலாகவே மனநல வைத்தியநிபுணர்கள் பார்க்கின்றார்கள்.

அழுகிய மற்றும் துர்நாற்றம் வீசக்கூடிய ஒரு உடலின் மீது பயம் தோன்றுமானால் அவர் ஒரு சாதாரண மனிதர் என சித்தரிக்கப்படுவார். ஆனால், காம உணர்வு மற்றும் அதை கொடூரமான முறையில் கையாள நினைப்பவர்கள் நிச்சயமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது போதைக்கு அடிமையானவர்களாகவே இருக்க முடியும் எனவும் வைத்திய நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

இவ்வாறானவர்கள் இலங்கையில் வாழ்கின்றார்கள் என்பதற்கான சம்பவங்களும் இலங்கையில் பதிவாகிகொண்டுதான் இருக்கின்றது.

அண்மையில் நிமோனியா நோயினால் உயிரிழந்த யுவதியின் உடலை தோண்டி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் சமூகத்தில் பலரின் கண்ணோட்டத்தில் வெவ்வேறு விதமாக பார்க்கப்பட்டாலும், இதன் பின்னால் இருக்கும் அந்த மனநலம் பற்றிய நிலையை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கொட்டதெனியாவைச் சேர்ந்த சேயா சவ்தமியின் கொடூர கொலை சம்பவத்தை பற்றியும் பலர் ஞாபகப்படுத்தி வருகின்றனர்.

சேயா சதேவ்மியின் கொலை சம்பவத்திலும் ஒரு போதைக்கு அடிமையான ஒருவரினால் தான் அச்சிறுமி மிகவும் கொடூரமாக பாலியல் துஷ்ப்பிரயோகத்துக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டார்.

ரஷ்மிகா நதிஷானிக்கு என்ன ஆனது?

பண்டாரவளை, பதுலுகஸ்தென்ன பிரதேசத்தை சேர்ந்தவர் தான் 25 வயதுடைய ரஷ்மிகா நதிஷானி.

இவர் கடந்த சில காலமாக நிமோனியா நோயினால் அவதியுற்று வந்துள்ளார். இதனால் சிகிச்சைகள் பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்த யுவதியின் இறுதி கிரியைகளும் இடம்பெற்றிருந்தது.

கடந்த வியாழக்கிழமை(04) பதுலுகஸ்தென்ன பொது மயானத்தில் அவரது இறுதிக்கிரியைகள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) காலை அவரது தந்தை கல்லறையை பார்வையிடுவதற்காக அங்கு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு கா்ததிருந்ததோ ஒரு அதிர்ச்சி.

உயிரிழந்த யுவதின் கல்லறை

காரணம் அங்கே அவரது மகளின் சடலம் தொண்டப்பட்டு உடைகள் அனைத்தும் களைந்த வண்ணம் கிடந்துள்ளது. இதை பார்த்து பேரதிர்ச்சி கொண்ட குறித்த தந்தை, உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், அங்கு விரைந்த பொலிஸார், புதைக்கப்பட்ட சடலத்தை சிலர் இரகசியமாக தோண்டியுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

இதனடிப்படையில், சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் படி, சடலத்தை யாரேனும் தோண்டி எடுத்து துஷ்பிரயோகம் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், சந்தேகநபர் அயல் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியின் மூடியையும் அதே வீட்டில் மண்வெட்டியையும் பயன்படுத்தி குழியில் இருந்த மண்ணை அகற்றி யுவதியின் சடலத்தை தோண்டி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்மிகா நதிஷானி உடல்

மீட்கப்பட்ட சடலம் பண்டாரவளை குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் பரிசோதனையின் பின்னர் பண்டாரவளை பதில் நீதவானினால் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பின்னர் சடலம் அதே இடத்தில் புதைக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கட்டாய நடவடிக்கை தேவை

மேலும், இவ்வாறான செய்றபாடுகளில் ஈடுபடுவர்கள் ‘நெக்ரோஃபிலியா“ எனும் மனநோய்க்கு ஆளாவதாகவும் மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறானவர்களுக்கு பொதுவாக பிணத்தை பார்த்தால் உறவு வைத்துகொள்ள வேண்டும் என்ற ஆசை, எண்ணம் இயல்பாகவே தோன்றுமாம்.

மேலும், அதை செய்து பார்த்துவிடவேண்டும் என எண்ணிக்கொண்டே இருப்பார்களாம்.

இப்படியே போனால், இலங்கையை பொருத்தவரை அதிகமாக மனநோயாளர்கள் வாழும் நாடுகளின் பட்டியலிலும் பிரதான இடம்பிடிக்கும் நிலை ஏற்படும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை…

ஆகவே இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விரைந்து செய்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.