குளவி குத்தியவருக்கு காலை கழட்டும் அளவுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

0

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக காணி ஒன்று துப்புரவு செய்து கொண்டிருந்த வேளையில் அப்பகுதியில் இருந்த குளவி ஒன்று கால் பாதத்தில் குத்தியுள்ளது.

குளவி குத்திய நபர் வளமை போல் தேசிப்புளி, மஞ்சள் போன்றவற்றை தடவி கை வைத்திய வேலைகளை பார்த்துள்ளார்.

அவர் ஒரு சர்க்கரை நோயாளி என்பதால் குறித்த அந்த குளவி குத்திய பகுதியில் கிருமித் தாக்கம் ஏற்பட்டிருந்த காரணத்தினால் கால்வீக்கம் ஏற்ப்பட்டுள்ளது.

வீக்கம் ஏற்ப்பட்ட காரணமாக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .

அனுமதிக்கப்பட்ட நபரை வைத்தியசாலையில் பார்வையிட்ட வைத்திய நிபுணர் கால் பாதம் பூராகவும் கிருமி பரவியுள்ளதால் இந்த பரவியுள்ள அனைத்து இடங்களையும் வெட்டி அகற்றி நடந்து போனவரை படுக்கையில் போட்டு உள்ளார்கள்.

மூன்று தினங்கள் கழித்து குறித்த நோயாளி காலை அவிழ்த்துப் பார்க்கும்போது பாதத்தில் அரைவாசியை காணவில்லை சர்க்கரை நோய் இருந்த காரணத்தினால் கிருமியின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கிருமி உள்ள அனைத்து இடங்களும் வெட்டி வெளியேற்றப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு நோயாளியை மன ஆறுதல் படுத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னதாக குறித்த நபரை மட்டக்களப்பு போதுன வைத்து சாலையில் இருந்து இன்னும் ஒரு விடுதிக்கு மாற்றிய போது நோயாளி குறித்த வைத்தியரிடம் நான் சிறியதொரு குளவிகுத்துக்காக தானே வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டேன் எதற்காக இந்த இந்தளவுக்கு வெட்டி அகற்றி உள்ளீர்கள் என்று கேட்டபோது,

அந்த வைத்தியர் இது அந்த விடுதியில் நடந்தது அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை தற்போது என்னிடம் உங்களை மாற்றியுள்ளார்கள் இனி நான் தான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கின்றேன் கூறியுள்ளார்.

ஆனால் ஏற்கனவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விடுதியில் இந்த வைத்திய நிபுணர் இவரை பார்வையிட்டு படங்வரைந்து இவ்வளவையும் அகற்ற வேண்டும் என்று கூறிவிட்டு மீண்டும் இரண்டாவதாக மாற்றப்பட்ட விடுதியில் தனக்கு தெரியாது என்று சொல்லுவது அங்கே ஒரு பிரச்சினை இருக்கின்றது அது கேள்விக்குறி?

. சரி முடிந்துவிட்டது வயது வந்த பிள்ளைகள் குடும்பம் ஒரு குடும்பத் தலைவர் வைத்தியசாலையில் குறிப்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்றால் இவ்வாறான பெரிய விடயங்கள் மாத கணக்கு எடுக்க வேண்டி வரும் ஆகவே அவரைப் பார்க்கச் சென்றவர்கள் அவருடைய நிலையை அறிந்து குறித்த விடயம் சம்பந்தமாக உயர் மட்டத்தில் பேசியபோது அழுத்தம் காரணமாக பலவந்தமாக வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தற்போது மட்டக்களப்பு மக்கள் மத்தியில் உருவாகியுள்ள ஒரு மனப்பயம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சின்னதொரு வருத்தமாக சென்றாலும் அவர்கள் கிருமி தொற்றுக்குள்ளாய் சவபெட்டியில் வீடு வருகின்ற நிலைதான் உருவாகி இருக்கின்றது.

சரி என்ன செய்யலாம் என்று குடும்பத்தாருடன் கலந்து ஆலோசித்து குறித்த நோயாளியை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குறித்த நோயாளியின் பிரச்சினை தொடர்பான வைத்திய நிபுணர் ஒருவரை அணுகி அவரிடம் காட்டிய போது இது யார் பார்த்த முட்டாள் வேலை ஏன் இவ்வாறு வெட்டி உள்ளார்கள் என்று அவர் கேட்ட அவர் இதை சுலபமாக செய்து முடிக்கலாம் உங்களிடம்பணம் இருக்கிறதா? பணமிருந்தால் இரண்டு கிழமைகளில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று கூறியுள்ளார்.

அவ்வாறு பணம் இருந்தால் கூட இப்போது மட்டக்களப்பில் உள்ள தனியார் வைத்தியசாலைகள் எல்லாம் போன உடனே ஒரு லட்சம் ரூபாய் முற் பணம் கட்ட வேணும் முற் பணம் கட்டிய பிறகு அவருக்கான அந்த சிகிச்சைகள் அளிக்கப்படும் என கூறினார்கள்.

தற்போது அந்த காலில் இருந்து எடுக்கப்பட்ட சதைகள் வளர்வதற்கான மருந்து கட்டிக் கொண்டிருக்கும் வேளையில் இவருக்கான சத்திர சிகிச்சை திகதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் பணம் கட்டி சத்திர சிகிச்சைக்கான திகதிக்கு சத்திர சிகிச்சைக்கு சென்ற போது மீண்டும் அதில் கிருமி பரவியுள்ளது அத்தோடு அதிகளவான சதைகளும் வளர்ந்துள்ளதால் இந்த சதையை சீவி இந்த கிருமியை அழிக்க வேண்டும் என்று வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

இப்போது சதையும் அதிகமாக வளர்ந்துள்ளது கிருமியும் தொற்றியுள்ளது ஒன்றும் செய்ய முடியாது சதை வெட்டப்படுவதற்காக ஒரு இலட்சத்து 82 ஆயிரம் ரூபாய் முதற்கட்டமாக அந்த வைத்தியசாலை பணம் கட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே கிருமி இருக்கிற காரணத்தினால் இரண்டாவது தரம் சத்திர சிகிச்சை செய்ய முடியாது .

இதற்கு நோய் எதிர்ப்பு தடுப்பு ஊசிகள் போட வேண்டும் என்று 55 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பணங்களை அந்த தனியார் வைத்தியசாலை ஊசிகளை வாங்கியுள்ளது.

முதலாவது ஊசி போட்டு இரண்டாவது நாள் நோயாளியின் மறுத்துவ அறிகை வருகின்றது இவருக்கு எந்தவிதமான கிருமியும் இல்லை என்று.

ஆனால் முதற்கட்டமாக அந்த ஒரு லட்ச ரூபாய் பணம் கட்ட சொன்னதால் இந்த பணத்தை கட்டிய நோயாளியின் குடும்பம் எப்படியாவது தனது கணவரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்த 50,000 ரூபாய்க்கு ஊசி வாங்கப்பட்டு கிருமி இலை என்ற போதும் அந்த நோய் எதிர்ப்பு தடுப்பு ஊசியை வாங்கிய காரணத்துக்காக அவருக்கு செலுத்தி உள்ளார்கள்.

இது ஒரு ஊடகவியலாளராக எனக்கு இந்த ஊசிக்கும் உள்ள விடயம் தெரியாது ஆனால் இதில் உள்ள வைத்தியர்கள் இப்படி செய்யலாமா இல்லை இந்த தனியார் வைத்தியசாலை பணம் கறக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தார்களா என்ற பதிலை வழங்க முடியும்.

மீண்டும் இரண்டாவது தடவை குறித்த அந்த சத்திர சிகிச்சைக்கு அவரது தொடையிலிருந்து தோல் சீவி அதை அந்த பாதத்தில் போட்டு அவரை சீர் செய்வதற்கு இதுவரை ஐந்து இலட்சம் ரூபாய்கள் செலவாகியுள்ளது.

ஒரு வைத்தியசாலை செய்கின்ற பிழைக்காக ஒரு கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்த ஒரு நபர் தனது காலை கழட்டி விடுவார்கள் என்ற காரணத்துக்காக 5 லட்சம் ரூபாய் செலவழித்து இன்று அவருடைய கால் 80 வீதம் குணமடைந்துள்ளது.

வைத்தியர்களாக படித்தவர்கள் பணம் சம்பாதிக்க ஏன் இவ்வாறு செய்கின்றார்கள்?

அல்லது இவர்களை சுயமாக செயல்படுவதற்கு ஏதாவது தலையீடு இருக்கின்றதா?

இது நான் எனது கண்ணால் கண்ட அனுபவம் குறித்த நபருக்கு தனியார் வைத்தியசாலையில் கொண்டு அவரது காலை சுகப்படுத்துவதற்கு கூடிய பங்கு வகித்தவர் என்ற ரீதியில் இந்த கருத்தினை பதிவிடுகின்றேன்’

மட்டக்களப்பு வைத்தியசாலை மரண வைத்தியசாலையாக மாறியுள்ளதுடன் கிருமி வைத்தியசாலையாகவும் மாறி இன்று பண முதலைகளின் கூடாரமாக காட்சியளிக்கின்றது.

படிப்பதற்காக வருபவர்களுக்கு உயிரிழந்தவர்களை வைத்து படிக்கின்ற காலம் போய் உயிருள்ளவரை வைத்து படிப்பிக்கும் காலம்தான் இன்று மட்டக்களப்பு போதன வைத்திய சாலையில் இதுவரை அதிகளவான கொலைகள் நடந்திருக்கின்றது.

ஆனால் துணிந்தவர்கள் எவரும் ஊடகங்களுக்கு முன் வந்து கருத்து தெரிவிக்காதது தான் இதற்கான காரணம் இதை திருத்த வேண்டுமாக இருந்தால் மக்களாகிய உங்களிடமிருந்து மாற்றம் உருவாக வேண்டும் .
சசி புண்ணியமூர்த்தி

Leave A Reply

Your email address will not be published.